வேலூர், தூத்துக்குடியில் குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்கள் - தமிழ்நாடு அரசு உத்தரவு
குறு, சிறு நிறுவனங்களின் மனுக்கள் மீது விரைந்து தீர்வு கானும் வகையில் வேலூர் மற்றும் தூத்துக்குடியில் புதிதாக 2 குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குறு, சிறு நிறுவனங்களின் மனுக்கள் மீது விரைந்து தீர்வு கண்டு நிலுவைத் தொகையை துரிதமாக பெற்றுத் தர சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 மண்டலங்களில் குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்கள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், வேலூர் மற்றும் தூத்துக்குடியில் புதிதாக 2 குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் வேலூர் மண்டலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மதுரை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.