புதிதாக 12 தோழி விடுதிகள் கட்ட டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு..!!

 
தோழி விடுதி தோழி விடுதி

 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தோழி விடுதிகள் கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.  

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளும் வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்யும் பெண்கல் பாதுகாப்பாப தங்குவதற்காக, தமிழக அரசே தொடங்கியது தான் தோழி மகளிர் விடுதி.  சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் தோழி மகளிர் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 12 தோழி விடுதிகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.  

govt

புதிதாக  12 தோழி விடுதிகளை கட்டுவதற்காக  தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.  அதன்படி, உதகை, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமம், கள்ளக்குறிச்சி மாவட்டம், வீர சோழபுரம், நாமக்கல்லில் விடுதிகள் கட்டப்பட உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் உள்ளிட்ட இடங்களிலும் விடுதிகள் கட்டும் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.