மாணவர்களுக்கு வழங்கும் முன் ஆசிரியர்கள் சாப்பிட்டு சரிபார்க்க தமிழக அரசு உத்தரவு!

 
1

தமிழ்நாட்டில் அரசு தொடக்க பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தையும் பள்ளி வருகையையும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் "காமராஜர் காலை உணவுத் திட்டத்தில்" உணவின் தரத்தை உறுதி செய்யத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவு பரிமாறுவதற்கு முன்பாக, பள்ளித் தலைமையாசிரியர் அல்லது பொறுப்பு ஆசிரியர்கள் உணவைச் சாப்பிட்டுப் பார்த்து அதன் சுவை மற்றும் தரத்தை முதலைலேயே உறுதி செய்ய வேண்டும்.

சமையல் கூடம், உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் உணவு பரிமாறப்படும் பகுதிகள் அனைத்தும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை ஆசிரியர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது என்பதற்காகவும், உணவின் தரத்தில் குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும் இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.