இன்று ரமலான் பண்டிகை - தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு..!
Mar 21, 2026, 05:25 IST1774050943000
தமிழகத்தில் இன்று ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் எனும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வியாழக்கிழமை (19/03/2026) மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே, ரமலான் மாதம் 30 நாட்களாக பூர்த்தியடைகிறது.
இதனால் 21ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட நோன்புகளையும், நல் அமல்களையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பானாக. இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும் சகோதரத்துவமும் தழைக்கட்டும். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வுடன் இப்பெருநாளை கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈதுல் ஃபித்ர் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளது

