தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளர் நியமனம்..! யார் இந்த கார்த்திக் ஐஏஎஸ்?
Oct 9, 2026, 14:22 IST1791535944275
தமிழகத்தில் உள்துறை செயலாளர், மின்வாரியத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை மாற்றி தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசின் நிர்வாகப் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனங்கள் தொடர்பான உத்தரவு வெளியாகியுள்ளது.
யார் இந்த கார்த்திக் ஐஏஎஸ்?
1996ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். அரசு பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வரும் 2034ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். எனவே அடுத்த 8 ஆண்டுகள் அரசு பணியில் இருப்பார் என்பது கவனிக்கத்தக்கது. Pay Levelஐ பொறுத்தவரை Level 15ல் கார்த்திக் ஐஏஎஸ் உள்ளார். இவரது கல்வித்தகுதி என்பது பி.காம் எம்.பி.ஏ.
கார்த்திக் ஐஏஎஸ் வகித்த பதவிகள்
- துணை ஆட்சியர், மாநகராட்சி துணை ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
- கரூர் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை இணை ஆணையர், கிராமப்புற மேம்பாட்டு துறை கூடுதல் இயக்குநர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர், சென்னை வருவாய் நிர்வாகத்துறை இணை ஆணையர், நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறை ஆணையர் ஆகிய பதவிகளையும் வகித்திருந்தார்.
- சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், பிசி, எம்.பி.சி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளர், விலங்குகள் நல்வாழ்வு, பால்வளம், மீன்வளம் நலத்துறையின் முதன்மை செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகிய பதவிகளை வகித்தார்.
- கடைசியாக ஜூலை 2024 முதல் அக்டோபர் 2026 வரை டான்சிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பதவியை கார்த்திக் ஐஏஎஸ் வகித்த நிலையில், இன்றைய தினம் தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

