மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் இதுதான்! - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

 
tn assembly

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு (எஸ்.எஸ்.) துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 ) பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும். (எஸ். எஸ்) குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இதைப்போலவே டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.