பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..!

செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடித் திட்டத்தின் படி, 1000 பழங்குடியின இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன் படி முதற்கட்டமாக 405 பழங்குடியின இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் இன்னும் 43 நாட்களில் வேலையில் சேர்வதற்க்கான திறன் பயிற்சி பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்களுக்கான சேர்க்கை தற்பொழுது நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற 25 பிப்ரவரி 2025 ஆம் தேதி பழங்குடியினர் நலத்துறை நடத்தும் வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கு பெற https://bit.ly/VettriNichayamskil முன் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
கல்வி தகுதி:
10th, 12th, ITI, DIP, UG
ஆண், பெண் இருபாலருக்கும் அனுமதி
வயது:
18 முதல் 33 வரை
கொண்டுவர வேண்டியவை:
* சான்றிதழ்கள் (ஆதார் அட்டை, கல்வி (Transfer certificate / Marksheet) வங்கி கணக்கு புத்தகம்)
* 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்)
தங்குவதற்கு தேவையான உடைமைகள் மற்றும் இதர பொருட்கள்.
சிறப்பு முகாம் நடைபெறும் இடம்
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கம் (GDP Hall) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செங்கல்பட்டு
பேருந்து வசதி மூலம் திறன் பயிற்சிக்கான இடத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.