சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு : இ ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்.! விண்ணப்பிப்பது எப்படி..?
உணவு டெலிவரி செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை கடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாலம் பொருட்களை டெலிவரி செய்து வரும் தொழிலாளர்களுக்காக சாலையோரங்களில் குளிர்சாதன வசதிகளோடு ஓய்வு அறை அமைக்கப்பட்டது.
அடுத்ததாக காப்பீடு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பணியின் போது மரணம் அடைந்தால் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. மேலும் ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண்ணில் முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டால் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அடுத்தாக 2 ஆயிரம் தொழிலாளர்கள் மின்சார இரு சக்கர வாகனம் வாங்க 20 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 4 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நல வாரியத்தின் அனுமதி பெற்று விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பைக் இல்லாமல் சைக்களில் சென்று உணவு டெலிவரி செய்யும் ஊரியர்கள் பயனடையவுள்ளனர். மேலும் பெட்ரோலுக்கு பல மடங்கு செலவு செய்து வரும் நிலையில் மின்சார பைக் மூலம் அதிக பணத்தை மிச்சம் செய்ய வாய்ப்பானது உருவாகியுள்ளது
இ-ஸ்கூட்டர் மானியத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..?
பணிச்சான்றிதழ், பள்ளி சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் முதல் பக்கம், வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம், நலவாரிய அட்டை போன்ற ஆவணங்கள் இருந்தால் ஆன்லைனில் இ-ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில், https://tnuwwb.tn.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, Subsidy for eScooter/இ-ஸ்கூட்டர்க்கான மானியம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுடைய நலவாரிய நிரந்தர பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு லாகின் செய்ய வேண்டும..ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பித்தால் போதும்.. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதேபோல, ஏற்கனவே வாகனம் வைத்திருப்பவர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.


