தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு..! மொபைல் போன் வாங்க ரூ.10,000 உதவித்தொகை..!

 
1

தமிழகத்தில் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கிடப்பட்டு, மின் கட்டணத்தை மின்வாரியம் நிர்ணயித்து வருகிறது. மின்வாரியத்தின் மீட்டர் ரீடிங் பணிகள் வழக்கம்போல் தொடர்ந்து நடந்து வருகிறது.


தமிழ்நாட்டில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சென்று மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்களின் பணியை எளிதாக்கும் வகையிலும், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TANGEDCO) ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதன்படி, மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் புதிய மொபைல் போன் மற்றும் சிம் கார்டு வாங்குவதற்காக பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில், மின் வாரியப் பணிகள் பலவும் செயலி மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஊழியர்கள் தங்களின் மொபைல் செயலியைப் பயன்படுத்தி துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதுடன், தங்குதடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக பிரத்யேக போஸ்ட் பெய்ட் சி.யு.ஜி (CUG - Closed User Group) சிம் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.

எப்படி பெறுவது?

இந்த நிதியுதவியானது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது என்றும், ஒருமுறை இந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் இந்த வசதியைப் பெற முடியும் என்றும் மின் வாரியம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த மொபைல் போன் நிதியுதவி ஊழியர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.