தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! உணவுத் திட்டம் ரத்து..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு மாற்றாக தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 உணவுப் படி வழங்கப்படும். 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
92% தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு உணவு வேண்டாம், உணவுப் படி வழங்க வேண்டும் என கேட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்து இன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 92 சதவீத தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவிற்கு பதிலாக உணவுப்படி பணமாக வழங்க வேண்டும் எனவும், அது தங்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
உணவு வழங்கும் திட்டதிற்கு மாற்றாக தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 உணவுப் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



