தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு : தீபாவளிக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை...?

 
5 Days of Diwali

தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் பண்டிகை அமைவதால், அரசு ஊழியர்கள், தனியார் துறைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கூடுதல் வேலைநாள் விடுமுறை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தீபாவளிக்கு மறுநாளே பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கிப் பணியாற்றுபவர்கள் இந்த வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்திச் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பத் திட்டமிட்டு வருகின்றனர். அதேவேளையில், பண்டிகையைக் கருத்தில் கொண்டு தீபாவளி மறுநாளை அரசு பொது விடுமுறையாக அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது. அதன்படி, 2027ம் ஆண்டில் அக்டோபர் 28 (வியாழன்) தீபாவளி வருகிறது. எனவே, அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (அக்டோபர் 29) ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்தால், சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களுடன் சேர்த்துத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நீண்ட விடுமுறையை அனுபவிக்க முடியும்.

வெள்ளிக்கிழமை அரசு சார்பில் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களிலும் இதுபோன்று சிறப்பு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில், மக்களுக்குத் தொடர்ச்சியாக 'சூப்பர் தீபாவளி' விடுமுறைக் கொண்டாட்டமாக இது அமையும். மேலும், வெளியூர் பயணங்களைத் திட்டமிடுவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது