தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பதியில் சாமி தரிசனம்..!
Updated: Dec 26, 2025, 13:07 IST1766734679023
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவியை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, அவரை தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபட்டார். தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக்க மண்டபத்தில் அர்ச்சகர்கள் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு சுவாமியின் பிரசாதங்களையும் வழங்கியதோடு, பட்டு ஆடைகளை வழங்கி கவுரவித்தனர்.


