#BREAKING 'ராஜ் பவன்' அல்ல, இனி 'மக்கள் பவன்'
Nov 30, 2025, 11:00 IST1764480636956
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்த கோரிக்கையை ஏற்று ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி மக்கள் பவன் என அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற நமது ஆளுநர் R.N.ரவி 'ராஜ்பவன்' என்பது 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் கோரிக்கை வைத்தார். அதை அனைவரும் வரவேற்ற நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய பிரேதங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகள் லோக் நிவாஸ் என அழைப்படும்.

