பணி ஆணை ரத்து- மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு
தமிழ்நாடு அரசின் பணி நியமன ஆணைய ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.
கடந்த வருடம் கரூரில் நடிகர் விஜயை காணச்சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தாருக்கு தவெக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணிகளின் அரசாணையை ரத்து செய்யுமாறு நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணையை ரத்து செய்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அளித்த அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. பணி ஆணை பெற்றவர்களின் வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என நிர்மல்குமார் கூறியுள்ளார்.

