நிதிசுமையை கருத்தில் கொண்டு ரூ.246 கோடி மதிப்பிலான திட்டங்கள் ரத்து- தமிழக அரசு அதிரடி

 
assembly

திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாத ரூ.246 கோடி மதிப்பீட்டிலான திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கான  நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமண்டபங்கள், இந்து சமய அறநிலையத்துறையினால் வணிகவளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நீதிமன்ற தடையாணை காரணமாகவும், திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற்கொண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தொடங்கப்படாத நிலையில் இருந்த ரூபாய் 115 கோடியே 77 இலட்சம் மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூபாய் 130 கோடியே 8 இலட்சம் மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என ஆக மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியினை கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.