இந்து சமய அறநிலையத் துறையில் 2 ஐஏஎஸ்- தமிழக அரசு அதிரடி
Jul 28, 2026, 17:58 IST1785241727682
இந்து சமய அறநிலையத் துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) நிர்வாக வசதிக்காக வடக்கு (சென்னை) மற்றும் தெற்கு (திருச்சி) என 2 புதிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கு கூடுதல் ஆணையர்களாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலமும் பிரிக்கப்பட்டுள்ளது. இரு கூடுதல் ஆணையர்கள் தலைமையின் கீழ் இரு மண்டலங்களும் செயல்படும்.

