#BREAKING மூடிய 717 டாஸ்மார்க் கடை விவங்களை வெளியிட்ட தமிழக அரசு
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அருகே செயல்படும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து டாஸ்மார்க் அதிகாரிகள் விரிவான ஆய்வு செய்து பொதுமக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடினர். இப்போது எந்தெந்த இடங்களில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது என்கிற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மண்டலம் 82, கோவை மண்டலம் 179, சேலம் மண்டலம் 82, திருச்சி மண்டலம் 84, மதுரை மண்டலம் 290 என 717 டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் எண்களுடன் விபரங்களை அறிக்கையாக வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

