கடனை குறைத்த தவெக அரசு!

 
vijay

வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் வாங்குவதை குறைத்தது தமிழ்நாடு அரசு.

வளர்ச்சி திட்டங்களுக்காக கடன் வாங்குவதை குறைத்தது தமிழ்நாடு அரசு. 2026-27 நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடன் பெறும் விகிதம் 21% சரிந்துள்ளது. மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் அளவு 21% குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் கடன் சரிந்துள்ளது. 
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.51,300 கோடியாக இருந்த கடன் அளவு, நடப்பு நிதியாண்டில் ரூ.40,500 கோடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, அதிகக் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.