சென்னை பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்

 
சென்னை பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வணிக திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

MRTS services from Chennai Beach to Chepauk suspended : சென்னை: பறக்கும்  ரயில் சேவை நிறுத்தம் - அதிகாரப்பூர்வ தகவல்

கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டுவருகிறது. இந்த  வழித்தடத்தில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2.30 லட்சம் நபர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பறக்கும் முறையில் சேவையில் மொத்தம் முதலீட்டு தொகையில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதாவது 100 ரூபாயில் 67 ரூபாயை தமிழ்நாடு அரசும் 33 ரூபாயை ரயில்வேயும் வழங்கி உள்ளது.

இந்நிலையில்,  கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ரயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையப்படுத்துவது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை  Business Plan study for complete takeover.) தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வணிக திட்ட அறிக்கை  தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்ய  சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்  சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள மந்தவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உட்பட அனைத்து ரயில் நிலையங்கள் மேம்படுத்தபடவுள்ளது.

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை.. ரயில் தடங்களில் வர இருக்கும்  மாற்றம்../From Chennai beach to Velachery change in the railway tracks

இந்த ரயில் நிலையங்கள் 1 முதல் 4  தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது உள்ளது. இவற்றில் 20,44,400 ச.மீ அளவில் இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் வணிக வளாகங்கள், உணவங்கள், வாகன நிறுத்த வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.