ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

 
ஜிகர்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகும் ‘ஜப்பான்’மற்றும்  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கார்த்தியின் 'ஜப்பான்' படப்பிடிப்பு நிறைவு | japan shooting wrapped up -  hindutamil.in

நவம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியாகும் ‘ஜப்பான்’மற்றும்  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நவ.10 -15ம் தேதி வரை முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, 5-வது காட்சி  இரவு 1.30 மணிக்கு முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Jigarthanda DoubleX Teaser-Trailer| Raghava Lawrence-SJ Suryah-Karthik  Subbaraj-Jigarthanda 2 teaser - YouTube

முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு காட்சி திரையிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. , ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ஜப்பான் திரைப்படம் வெளியாகிறது. இதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.