10,000 பேருக்கு தமிழக அரசு வேலை.. குட் நியூஸ்..!!

 
Q

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை (அக்.6) வெளியாகிறது. இந்தத் தேர்வு மூலம் சுமார் 10,000 காலிப் பணியிடங்கள்நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு வெளியான குரூப்-4 தேர்வு அறிவிப்பில் 4,662 காலிப் பணியிடங்கள் இடம்பெற்றிருந்தன.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பபடுகிறது. நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஆண்டு கால அட்டவணைப்படி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெறும். எஸ்எஸ்எல்சி தகுதி: குரூப்-4 தேர்வை பொருத்தவரையில் பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.

குரூப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்றாலும் முதுகலை பட்டதாரிகளும், பட்டதாரிகளும்தான் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கிறார்கள் . கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். எனவே இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கும் சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1, குரூப் 2 பணியிடங்களில் காலியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். எனவே, குரூப் 4 அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.