மாணவர்களுக்கு இனி ஸ்டைலான டிசைனில் சைக்கிள்! முதல்வர் அதிரடி உத்தரவு
Jun 24, 2026, 15:34 IST1782295456253
பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் சைக்கிள் டிசைனை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சைக்கிள் டிசைனை மாற்ற தமிழக அரசு முடிவு. செய்துள்ளது. அதன்படி பல வண்ணங்களில், புதிய வடிவமைப்பில் வழங்க தீவிர ஆலோசனை நடைபெற்றுவருகிறது. நடப்பு ஆண்டிலேயே புதிய சைக்கிள்களை வழங்கவும் அரசு பரிசீலனை செய்துவருகிறது. தரமானதாகவும், மாணவர்களை கவரும் வகையிலான டிசைன்களிலும் சைக்கிள்களை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அரசு நிதியுதவி பெறும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதனையடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பிரதீப் குமார் சைக்கிள் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

