விஜயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு
Jun 19, 2026, 19:58 IST1781879286926
முதலமைச்சரின் விஜயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இவர் ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, விஜயின் நண்பன்,லியோ, பீஸ்ட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவரின் தந்தை யுவி பாபு ஒரு தெலுங்கு இயக்குநர். இவரது ஆசையின் காரணமாகவே மனோஜ் ஒளிப்பதிவாளர் ஆகியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சரின் விஜயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக அறியப்படும் மனோஜ்க்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக மனோஜ் பரமஹம்சா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

