கலைஞர் கனவு இல்லம் திட்டம்- மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி! ரூ.3,500 கோடி ஒதுக்கீடு

 
assembly assembly

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

குடிசையில்லா தமிழகம் என்ற இலக்கை எட்டும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு ஒரு லட்சம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்,  கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி ஒரு வீட்டிற்கு 3.50 ரூபாய் லட்சம் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3500 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதி விடுவிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Advertisement