ஜப்பான் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

 
tn

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்துள்ளார். சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும்,  தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் கடந்த 23ஆம் தேதி முதல்வர்  மு.க. ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவனத் தலைவர்களை சந்தித்த அவர் அங்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழகத்தின் வசமாக்கினார்.

இந்த சூழலில்  சிங்கப்பூர் நாட்டில் தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின். கான்சாய் விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி  வரவேற்றார். 

tn

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

tn

அத்துடன் ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் கென் பாண்டோவை  சந்தித்து,  சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.