ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

 
Ramassmy Padaiyatchiyar


ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  

சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரபோராட்ட வீரருமான ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசு சார்பில் ராமசாமி படையாட்சியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டி,  அண்ணா சாலை ஹால்டா சந்திப்பில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.  

Ramasamy Padaiyatchi

மேலும் அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள சி.சி. ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்  பொன்முடி, பி.கே.சேகர்பாபு,  மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.