சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

 
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.  சென்னை இதழியல் கல்வி நிறுவனமானது, சிறந்த பத்திரிக்கையாளர்களை உருவாக்கும் நோக்கில்  முழுவதும் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.  திறமையும் ஆர்வமும் கொண்ட பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை இதழியல் துறையில் முழுமையான பயிற்சி பெற்று திறமையான மாணவர்களாக உருவாக்குவதற்காக கல்வி நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தை பொருத்தவரையில் ஓராண்டு முதுகலை இதழியல் படிப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

ஸ்டாலின்

அதன்படி இன்றைய இன்றைய தினம் இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி வீரமணி,  காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், முக்கிய ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த சென்னை இதழியல் கல்வி நிறுவனமானது நடப்பாண்டு முதல் செயல்பட உள்ளது.  இந்த நிறுவனத்தை பொருத்தவரை தமிழ்,  ஆங்கிலம் என்று இரு மொழி மொழிகளிலும் ஓராண்டு முதுகலை பட்டய படிப்பு வழங்கப்பட உள்ளது.  இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் விரைவில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு , அதன் பின்னர் வகுப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.