திருப்பத்தூரில் இன்று கள ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

 
stalin stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.  

 வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று  (ஜூன் 25)  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து   சாய்நகர் சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் (SNSI) மூலம்  காட்பாடிக்குச் சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்ட அவருக்கு வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.  

திருப்பத்தூரில் இன்று கள ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

வேலூர் மாவட்டத்தில், 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தையும், கருணாநிதி திருவுருவச் சிலையையும் திறந்து வைத்தார். பின்னர் மாலையில்  சாலை வழியாக திருப்பத்தூர் சென்ற அவர், அங்கு  நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவச் சிலையையும் திறந்து வைத்தார்.

stalin

இந்நிலையில் இன்று காலை  10.30 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 1 லட்சம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு  மதியம் 12 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வருகை தரும் முதல்வர், அங்கிருந்து  வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்புகிறார். மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி, திருப்பத்தூரில்  ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுள்ளது. தடையைமீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.