முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவு : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!

 
mk stalin write a letter to jaishankar about fishermen arrest mk stalin write a letter to jaishankar about fishermen arrest


ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செவ்வாய் கிழமை) காலமானார்.  கடந்த சில மாதங்களாகவே சிறுநீரம் தொடர்பான பிரச்சனைக்காக  டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக அவரது தனிச்செயலாளர் தெரிவித்திருக்கிறார்.  1960ம் ஆண்டில்  தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சத்யபால்,   சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மத்திய இணையமைச்சர்  என பதவிகளை வகித்துளார். அதன்பிறகு கடந்த 2004ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜகவில் இணைந்தார்.  

சத்யபால் மாலிக்

பின்னர் 2017ம் ஆண்டு முதல் ஆளுநராக இருந்து வரும் அவர், ஜம்மு காஷ்மீரில் ஆளுநராக  இருந்தபோதுதான் ஆர்டிக்கிள் 370 ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் கடந்த 2022ம் ஆண்டு வரை கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்தார்.  

இந்நிலையில் மறைந்த சத்யபால் மாலிக் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “சத்யபால் மாலிக் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். அமையின் ஊடாக உயர்ந்து, அதிகாரத்திற்கு உண்மையாக பேச துணிந்த ஒரு மனிதர். அவர் வகித்த பதவிகளை மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் வரலாரு நினைவில் வைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.