‘திடீர் தலைச்சுற்றல்..’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..

 
mk stalin write a letter to jaishankar about fishermen arrest mk stalin write a letter to jaishankar about fishermen arrest


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  

இதுதொடர்பாக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார்.  பரிசோதனைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வெண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  இதனையடுத்து அடுத்து 2 நாட்கள் முதலமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 22 மற்றும் 23ம் தேதிகளில் முதலமைச்சர் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு கள ஆய்வுக்காக செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.