தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா..?
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில், 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 8ஆம் தேதி முதல் முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்பம் மே 26ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 9ஆம் தேதியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
10ஆம் வகுப்பு தேர்வு மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதியும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறுமதிப்பீடுக்கு ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மதிப்பெண்களில் திருப்தியற்ற மாணவர்கள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மறு கூட்டலுக்கான கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும். மாணவர்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை மே 22ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

