தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் பதவி நீட்டிப்பு

 
அ

தலைமைச் செயலாளர் சாய்குமார் பதவிக்காலத்தை  6 மாதம்  நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்துடன் பணி ஓய்வு பெற இருந்த தலைமை செயலாளர் சாய்குமார் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள தலைமைச்செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலத்தை 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாய்குமார் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடதக்கது.

சாய்குமார் கடந்த ஏப்ரல் 2026-ல் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.மதுரை, தர்மபுரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் (TNEB Chairman), பொதுப்பணித்துறைச் செயலாளர், மற்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைச் செயலாளர் - 1 போன்ற மிக முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.