தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் விஜய்யின் 'மாஸ்டர் பிளான்'!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது போர்க்கால அடிப்படையில் துரிதமாக வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது இந்த உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். இக்கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த உயர்மட்ட ஆலோசனையின் போது, பாலியல் குற்ற வழக்கு விசாரணைகளை எவ்வித தொய்வும் இன்றி மிக துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனையை விரைந்து பெற்றுத் தர அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். மேலும், இதுபோன்ற கொடூரமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை ஆரம்பக்கட்டத்திலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையிலும், மற்றவர்களுக்கு இதுவொரு பாடமாக அமையும் வகையிலும் சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும். வழக்கினை நடத்தியும். கடும் நண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலையைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறிந்தும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும். காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள். வழக்கினை முறையாக நடத்தி கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலார் முனைவர் மு.சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் உள்ளிட்ட உயர் அலுவகர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்டமாக புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@CTR_Nirmalkumar | @imrajmohan |
— TN DIPR (@TNDIPRNEWS) May 24, 2026
1/2 pic.twitter.com/HJeObKdPNt

