மக்களோடு மக்களாக அமர்ந்து டீ குடித்த தமிழக முதலமைச்சர் விஜய்..!

 
1

மதுராந்தகத்தில் டீ கடையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் விஜய்..மதுராந்தகம் இடைத்தேர்தல் ரோடு ஷோவின் போது முதல்வர் விஜய் இடையிலேயே வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த டீக்கடை ஒன்றில் நிறுத்தி முதியவர்களுடன் அமர்ந்து நலம் விசாரித்த படியே வாக்கு சேகரித்தார்.

மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், எல். எண்டத்தூர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று அங்கு டீ குடித்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். டீக்கடையில் அமர்ந்து பொதுமக்களுடன் இயல்பாக உரையாடிய விஜய், அவர்களிடம் ஆதரவு கோரினார். விஜயை நேரில் காண அங்கு திரண்ட பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக வயலுக்குச் சென்ற விஜய், அங்கு டிராக்டரை ஓட்டி விவசாயப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் உரையாடி, ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விஜய் வயலில் டிராக்டர் ஓட்டிய காட்சி அப்பகுதியில் கவனம் பெற்றது.