ஆந்திர முதல்வரை அவருடைய இல்லத்தில் சந்தித்தார் தமிழக முதல்வர் விஜய்
Oct 13, 2026, 18:18 IST1791895726697
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.
அரசுமுறை பயணமாக ஆந்திர மாநிலம் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், கனகதுர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் விஜய்யை, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவும் அவரது மகன் நாரா லோகேஷும் வரவேற்றனர். அதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் விஜய், கிருஷ்ணா நதி நீர் பங்கீடு குறித்து, கோதாவரி - காவிரி திட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

