தமிழக முதலவர் விஜய்க்கு ஜல்லிக்கட்டு காளை சிற்பம் பரிசு..!

 
1

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு, தவெக வேட்பாளர் சத்தியபாமா சிறப்பு பரிசு வழங்கினார். ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற வடிவமைக்கப்பட்ட சிற்பத்தை முதல்வர் விஜய்க்கு சத்தியபாமா பரிசாக வழங்கினார். விஜய்க்கு இந்த சிற்பம் வழங்கப்பட்ட காட்சி பிரசாரக் கூட்டத்தில் கவனம் பெற்றது.

தமிழக முதலவர் விஜய்க்கு அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் வேல் பரிசாக வழங்கினர். தாராபுரம் பிரசார அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் விஜயை சந்தித்த அமைச்சர்கள் இருவரும் வேலை வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்வு அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.

அமைச்சர் கீர்த்தனா ரோஜா மலர் வழங்கி வரவேற்றார். பிரசார அரங்கில் நடைபெற்ற இந்த வரவேற்பின்போது, அமைச்சர் கீர்த்தனா முதல்வர் விஜய்க்கு ரோஜாவை வழங்கினார். இதனை விஜய் பெற்றுக்கொண்டார்.