நாளை திருச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் : தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியீடு!

 
1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்கிறார்.

வரும் மார்ச் 22- ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர்,

மார்ச் 23- ஆம் தேதி தஞ்சை, நாகை,

மார்ச் 25- ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி,

மார்ச் 26- ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம்,

மார்ச் 27- ஆம் தேதி தென்காசி, விருதுநகர்,

மார்ச் 29- ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி,

மார்ச் 30- ஆம் தேதி சேலம், கள்ளக்குறிச்சி,

மார்ச் 31- ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர்,

ஏப்ரல் 02- ஆம் தேதி வேலூர், அரக்கோணம்,

ஏப்ரல் 03- ஆம் தேதி திருவண்ணாமலை, ஆரணி,

ஏப்ரல் 05- ஆம் தேதி கடலூர், விழுப்புரம்,

ஏப்ரல் 06- ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை,

ஏப்ரல் 07- ஆம் தேதி புதுச்சேரி,

ஏப்ரல் 09- ஆம் தேதி மதுரை, சிவகங்கை,

ஏப்ரல் 10- ஆம் தேதி தேனி, திண்டுக்கல்,

ஏப்ரல் 12- ஆம் தேதி திருப்பூர், நீலகிரி,

ஏப்ரல் 13- ஆம் தேதி கோவை, பொள்ளாச்சி,

ஏப்ரல் 15- ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னை,

ஏப்ரல் 16- ஆம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர்,

ஏப்ரல் 17- ஆம் தேதி தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.