முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்..!!

 
mk stalin write a letter to jaishankar about fishermen arrest

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.  

தமிழகத்தின்  பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தொழில் நிறுவனங்களை ஈர்ப்பது, பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று நிறுவனங்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களப்பணியாற்றி வருகிறார்.  இதன் பலனாக பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.  

இதன் தொடர்ச்சியாக மேலும், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அவர் செல்ல இருக்கிறார்.  

cabinet

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.  இதில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், புதிய தொழில் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அனுமதி, ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.