பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

 
mk stalin write a letter to modi

 டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.  

சென்னையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்கு  திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  டி ஆர் பாலு,  கனிமொழி,  தமிழச்சி தங்கபாண்டியன்,  திருச்சி சிவா,  தயாநிதிமாறன் ஜெகத்ரட்சகன்,  டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். 

தொடர்ந்து  பிரதமர் மோடியை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.  முன்னதாக தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை காண புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிக்கொண்டார். பின்னர் பிரதமர் அலுவலகம் சென்ற அவர்,  தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை   பிரதமரிடம் அளிக்க உள்ளார். 

 ‘பிரதமர் மோடி  நீடித்த ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள’ - முதல்வர் ஸ்டாலின்..!

குறிப்பாக அதில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல், சமக்ர சிக்‌ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.573 கோடியை விடுவித்தல்,  தமிழ்நாட்டிற்கான வரி நிலுவைகள், வெள்ள பாதிப்புகளுக்கான நிவார நிதிகளை வழங்குதல், தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 
 
தொடர்ந்து  இந்த பயணத்தின் ஒரு பகுதியாக  காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.