'பெரியார் விஷன்' OTT தளம் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..

 
 'பெரியார் விஷன்' OTT தளம் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சமூக நீதிக்கான ‘பெரியார் விஷன்’ ஓடிடி தளம் தொடங்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதி கருத்துக்களை வெளியிடும் வகையில்  “PERIYAR VISION – (Everything for everyone)” என்கிற ஓடிடி தளத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, திரைப்பட நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இந்த ஓடிடி தளத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்ததார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு வாயிலாக பெரியார் விஷன் ஓடிடி தளம் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். 

 'பெரியார் விஷன்' OTT தளம் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

அவர் தனது ஓடிடி பதிவில், “வணக்கம்.. தந்தை பெரியார் இந்த உலகளாவிய மானுட தலைவராக பார்க்கப்படுகிறார். அந்தவகையில் இன்றைய காலத்தின் தேவையாக தொடங்கப்பட்டுள்ள பெரியார் விஷன் ஓடிடி தளத்தை பாராட்டுகிறேன்.. தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான பணியில், பல்வேறு ஊடகங்களையும், கலை வடிவங்களையும் நம்முடைய திராவிட இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாகி, சமூக ஊடகங்கள் பெருகியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்லும் வகையில், சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடியாக பெரியார் விஷன் ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொள்கைக்காக தொடங்கப்படும் உலகின் முதல் ஓடிடியாக இதுதான் இருக்கும் என நினைக்கிறேன்.. எல்லாவற்றிலும் முன்னோடியாக திராவிட இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது.  சுயமரியாதை இயக்கத்தோட நூற்றாண்டு விழாவில், குடியரசு இதழின் நூற்றாண்டு விழாவில் பெரியார் விஷன் ஓடிடி தொடங்கப்படுவது சிறப்புக்குரியது. பெரியார் விஷன் வெல்க..! வெல்லும்.!” என்று தெரிவித்தார்.