தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை;
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழக மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்.
சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப்பணிகள்.
இவை நான்கும் தமிழகத்தில் தொடரும் என்பது இந்தத் திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி, எனக் குறிப்பிட்டுள்ளார்.
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் #திருவள்ளுவர்_நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்!#வெல்வோம்_ஒன்றாக! #ThiruvalluvarDay pic.twitter.com/AuPZ4ceNoc
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 16, 2026


