காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாட்டின் நகற்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘காலை உணவு’ திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு செப்.15ம் தேதி தொடங்கி வைத்தார். முதன் முதலக மதுரை மாவட்டம் ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பறிமாரி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்திருந்தார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திட்டத்தினை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி திருக்குவளையில் முதல்கட்டமாக இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்தார்.

பின்னர் இரண்டாம் கட்டமாக 2024ம் ஆண்டு ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, 2430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு மரிமாறி விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். இதன்மூலம் 3 .05 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு , திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.


