“முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ்க்கு வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்..!
திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல் தனது ஆய்வை நிறைவு செய்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்! அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் "Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன். அதன் வாய்மொழித் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு "முனைவர்" பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
"முனைவர்"பட்டம் பெற்றுள்ள அன்பில் மகேஷை வாழ்த்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளமான X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"When leaders learn, generations dream bigger! மகிழ்கிறேன்! "முனைவர்" பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு
வாழ்த்துகள்!
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும் குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் 'Role Model' ஆகிவிட்டார்..!" என்று பதிவிட்டுள்ளார்.
When leaders learn, generations dream bigger!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025
என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி @Anbil_Mahesh-க்கு வாழ்த்துகள்!
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற… https://t.co/F5fpzEC5Me

