இன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பயிற்சிக் கூட்டம்!

 
Q Q
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; "இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்­படை உரி­மை­களில் ஒன்று வாக்­கு­ரி­மை­; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்­தி­யத் தலை­மைத் தேர்­தல் ஆணை­யம் மூலம் S.I.R. எனப்­ப­டும் சிறப்­புத் தீவிர வாக்­கா­ளர் பட்­டி­யல் திருத்­தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநி­லத்­தில் ஏறத்­தாழ 65 இலட்­சத்­திற்­கும் அதி­க­மான மக்­க­ளின் வாக்­கு­ரி­மையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணை­யம் தற்போது அதனை தமிழ்­நாட்­டிலும் நடை­மு­றைப்­ப­டுத்­தப் போவ­தா­க அறி­வித்­துள்­ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட - என்­னென்ன பணி­களை மேற்­கொள்ள வேண்­டும், அவற்றை எப்­படி மேற்­கொள்ள வேண்­டும், கழ­கத் தலைமை முதல் கடைக்­கோ­டி­யில் உள்ள தொண்­டர் வரை அனை­வ­ரை­யும் ஒருங்­கி­ணைத்­துச் செயல்­ப­டு­வது எப்­படி என்­பது உள்­ளிட்ட அனைத்­தை­யும் விவா­தித்து, அவற்­றைக் களத்­தில் செயல்­ப­டுத்­து­வ­தற்காக இன்று (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.