தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு: இனி இந்தச் சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ எனப் பெயர் மாற்றம்!
வள்ளலார் தினத்தையொட்டி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல் நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்ரவரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்தப்படும்.
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) February 1, 2026
நமது #DravidianModel-இல்,
🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
🔹ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா
🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என
வள்ளலாரின் புகழைப்… pic.twitter.com/i1BnVZkgFN


