அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..!!

 
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..!!

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாசாகோ ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில்  இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.  

மாநில தேர்தல் ஆணையம்

அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில்,  தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். அதன்படி இந்த கூட்டத்தில் காங்கிரஸ்,  பாஜக , பகுஜன் சமாஜ்,  சிபிஐ,  சிபிஎம் ஆகிய தேசிய கட்சிகள் மற்றும்   திமுக, அதிமுக, தேமுதிக, நாதக  ஆகிய மாநிலக்கட்சிகள்  என ஒவ்வொரு காட்சிகள் சார்பிலும் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தை பொருத்தவரையில் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் சிறப்பு முகாம்களுக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.