தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு!

 
1

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக் குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட்டன. கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய ரசாயன மண்டலமாக செயல்படுத்த திமுக துணைபோகிறது.

மூடப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் திறக்கிறது. இதை எதிர்க்கும் விவசாயிகள், காவல் துறை மூலம் மிரட்டப் படுகின்றனர். மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக ஆணையம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திமுக அரசு மவுனம் காத்தது. மேகேதாட்டு அணை தொடர்பான ஆணைய தீர்மானத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது.