திராவிட பிடியிலிருந்து ‘தமிழ்நாட்டை’ விடுவிக்க முடியாது - வைகோ உறுதி!!

 
vaiko

பாமக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?  என்ற கேள்விக்கு வைகோ பதிலளித்துள்ளார். 

vaiko ttn

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில்  மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். 

vaiko

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ , பிரதமர் நரேந்திர மோடி 5 முறை அல்ல, 50 முறை வந்தாலும் தமிழ்நாட்டை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது என்று கூறினார். பாமக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவங்க பயந்து போய் கூட்டணி வைத்துள்ளனர் என்றார்.