தமிழக பாஜக-வின் புதிய வியூகம் : பெண்கள் 5 பேருக்கு வாய்ப்பு..!

 
1

சென்னையில் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த மார்ச் 23ஆம் தேதி, தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை அறிவித்தனர்.

இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடுவது, பரப்புரை என தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து உயர்மட்ட அளவில் தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பலமுறை தமிழகம் வந்து பலகட்ட ஆலோசனைகளை நடத்திய பிறகும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. 

இந்நிலையில் சற்று முன் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது 

பாஜ வேட்பாளர் பட்டியல் (27 தொகுதிகள்)
1.மயிலாப்பூர்- தமிழிசை
2.தளி- நாகேஷ்குமார்
3.மொடக்குறிச்சி- கிருத்திகா சிவக்குமார்
4.ஊட்டி-போஜராஜன்
5.அவிநாசி- எல்.முருகன் (மத்திய அமைச்சர்)
6.திருப்பூர் தெற்கு- தங்க ராஜ்
7.கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
8.கந்தர்வக்கோட்டை- உதயகுமார்
9.புதுக்கோட்டை- ராமசந்திரன்
10.திருப்பத்துார்- திருமாறன்
11.மதுரை தெற்கு- ராமசீனிவாசன்
12.சாத்துார்- நயினார் நாகேந்திரன்
13.திருச்செந்துார்- ராதாகிருஷ்ணன்
14.வாசுதேவநல்லுார்- அனந்தன் அய்யாசாமி
15.ராதாபுரம்- பாலகிருஷ்ணன்
16.நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
17.விளவங்கோடு- விஜயதாரணி
18.ஆவடி- ராஜசிம்மா மகேந்திரா
19.திருவண்ணாமலை- ஏழுமலை
20.தஞ்சாவூர்- முருகானந்தம்
21.திருவாரூர்- கோவி சந்துரு
22.அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
23.மானாமதுரை- பொன் பால கணபதி
24.ராமநாதபுரம்- நாகேந்திரன்
25.குளச்சல்- சிவக்குமார்
26.பத்மநாபபுரம்- ரமேஷ்
27.ராசிபுரம்- பிரேம் குமார்

பெண்கள் 5 பேருக்கு வாய்ப்பு
தமிழக தேர்தலில் போட்டியிட பெண்கள் 5 பேருக்கு பாஜ வாய்ப்பு அளித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிட வில்லை.