கோவையில் இன்று தமிழ்நாடு பாஜக செயற்குழு கூட்டம்!!

 
Annamalai

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் இன்று பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

Modi

 இந்நிலையில் தமிழக பாஜக செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி செல்வ மஹாலில் இன்று நடைபெறுகிறது. பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் , இன்று காலை நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் வினோத் , சி.டி. ரவி மற்றும் தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

annamalai

இதில் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வது பற்றி ஆலோசனை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை நிகழ்ச்சிகளை தமிழகம் எங்கும் ஒரு மாதத்திற்கு பிரச்சார இயக்கமாக எடுத்துச் செல்வது குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக  கூறப்படுகிறது.